Posts

Showing posts from November, 2016

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

Image
துவாரகனின் கவிதைப்பிரதி பல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டது. எளிமையான, செப்பனிடப்பட்ட , சிக்கனமான மொழி ஒரு காலகட்டத்தின் துயரப்பாடுகளை கவிமொழியாக கூறுகின்றது. இழந்து போன பொற்காலங்களை , அனுபவங்களை கூறுகின்றன. ரத்தமும் சதையுமான கதைகளை கண்ணீருடன் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகின்றன. குணேஸ்வரன் அவர்களது கவிதை பிரதியை நான்கு வகையான விடய தளங்களில்,உத்தி முறைகளை என்னால் வாசிக்க முடிந்தது. 1) ஈழப்போராட்டதில் ஏற்பட்ட மனித அவலங்களும், உடல், உள சிக்கல்களையும் நேர்கோட்டு பொதுமைபடுத்தி(direct generalization ) வெளிப்படுத்தும் கவிதைகள். 2) அதிகாரம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றபோது எழுகின்ற சாதாரணனில் ஏற்படுகின்ற கோபங்களை குறியீட்டுவடிவமாக(symbolic ) வெளிப்படுத்தும் கவிதைகள். 3) அரசியல் செயல்பாடுகளின் மேற்கொண்ட அவநம்பிக்கையை ஏளனஞ்செய்து(irony ) படைக்கப்பட்ட கவிதைகள்(சர்க்கஸ் கோமாளிகளும் னங்களும், படங்காட்டுதல்) 4) சமூகத்தின் கள்ள மௌனங்களை கேள்விக்கு உட்படுத்தும் உருவகமுறை(metaphor ) கவிதை வெளிப்பாடு. இருந்தாலும் மேற்கிறிப்பிட்ட தளங்களில் இருந்து விலகல்களான இருந்த கவிதைகளும் இருக்கின