Posts

Showing posts from October, 2016

உயிர் வாழ்வதற்கான ஓட்டப்பந்தயம் -"Shooting dogs" திரைப்படத்தை முன்வைத்து ஒரு பார்வை

Image
ஈழத் தமிழர்களிற்கு நிகழ்ந்த மனிதப் பேரவலங்களிற்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஒரு நீதியை பெற்று தர முடியுமா என்ற கேள்வி இன்றும் எம்மை குடைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அண்மையில் காணக்கிடைத்த திரைப்படம் shooting dogs இயக்கியவர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸன்(Micheal caton Jones) 2005 ம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம் 115 நிமிடங்கள் நிஜத்தில் இரத்தத்தை சுண்டும் மனித அவலத்தை காட்சிகளாக கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. Heartland திரைப்பட விழாவில்        dramatic feature ற்கான விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தலைப்பே ஒரு விசித்திரமான ஒரு குறியீட்டு வடிவத்துடனான கதையாடலை நிகழ்த்தி உள்ளது. அமைதிப்படையாக ருவாண்டாவிற்கு வந்திருந்தது ஐக்கிய நாடுகளின் இராணுவம். ஹுட்டு அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் கொல்லப்பட்ட டுட்சி இனத்தவர்களின் பிணங்களை தின்று கொண்டிருந்தன நாய்களுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கண்முன்னே கொலைவெறித் தாண்டவம் ஆடிய ஹுட்டு தீவிரவாதிகளிற்கு எதிராக ஐ.நா படையினரின் துப்பாக்கிகள் உயர்த்தப்படவில்லை. நாய்கள் என்கின்ற குறியீட்டு வடிவம் அப்பிரதேசத்தின் அவலத்தினை படம்பிடி

"பருத்தித்துறை துறைமுகமும் நல்லிணக்கத்தை செய்கின்றது...?"

Image
இப்போது பழைய 'ஹோ' என்ற கடலின் இரைச்சல் சத்தம் இல்லை. அந்தகார வெளியை கிழித்துக் கொண்டு பயமூட்டும் காற்றசைப்பு சத்தம் மட்டும் கேட்கின்றது. இமைக்கும் அடங்க மறுக்கும் கறுப்பு சூனியத்தில் மெல்லென வருகின்றது ஆழ நீலக்கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையை ஓட்டுகின்றேன். பொட்டுப் பொட்டாய் உடைந்த சுண்ணாம்புக்கற்கள்,  உடைந்த கூரையற்ற சிறிய கட்டிடம். அலை களின் வீச்சில் ஈரலித்த கற்சுவர்கள் பெரும் பாகங்களாய் விழுந்துள்ளன. முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைக்கப் பட்டிருந்தது கட்டடம்.  தனக்கும் விடுதலை வேண்டி அச்சிறு கட்டிடம்  "துறைமுகங்கள் அதிகாரசபை" என்ற சுலோகம் ஒன்றை தாங்கியிருந்து. உப்புக்காற்றில் குளிர்மையை  இழந்து பழுப்பும், பச்சையுமான பனைமரத்தூண்கள் தாங்கியிருந்த மூன்று வட்டக் கொட்டில்கள். அழகாக நேர்த்தியாக இருக்கைகள் வட்டமாக சப்பு பலகைகளை கொண்டு அடிக்கப்பட்டு இருந்தது. குச்சி அடைப்பு கூரையின் கீழே நான்கு ஐந்து இளைஞர்கள் 'பொல் ரொட்டியும் கட்டைச் சம்பலும்' சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஏசி பஸ்களில் வந்து இறங்கிய பெண்களையும், ஆண்களையும் பார்த்து ஏதோ பேசித் சிரித்துக்கொண்

பாடசாலைக் கல்வியை சமுதாயத்திற்கான கல்வியாக வென்றெடுக்க தவறுகின்றோமா....??

Image
கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பாடசாலையில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர்.  அப்போது, பாடசாலை என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்?  குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா?  குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி.  “கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி’  என்று அவர் நம்பினார். இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது;  பாடசாலைக் கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் , கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார்.

"சித்தப்பா பூங்கா"

Image
சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும். கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே.  விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்களும், விந்தையான உருவமுடைய பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் அங்கே இருந்தார்கள். "உனக்கு தெரியுமா? சிறப்பான அவன் அறிந்த காட்டைப் பற்றியது இக் கனவு." மனதில் கவலை இருந்தால் உற்சாகம் ஏற்படுவதற்கும், தியாகங்களை மனதில் சுமப்பதற்கும் இக் காட்டைப் பற்றி நினைத்தால் போதும். சில நேரங்களில் நல்ல கனவுகளை நாம் காண்போம். ஆனால் விழிக்கும் போது அது என்னவென

போருக்கு பிந்திய சமூகத்தில்- "அடுத்த கட்டப் போராட்டம்" - மனித மனங்களிலேயே.

சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் போராளிக் குடும்பமாக வாழ்ந்த வீட்டை துறந்து முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் போது மன இறுக்கத்தை தூண்டும் மௌனங்களாலும், கலவரமூட்டும் சப்தங்களாலும் , புனிதத்தின் பெயரால் வரலாற்றின் நியாயங்களை வன்முறைக்கு உட்படுத்தும் ஒரு சமூகத்தைக் கண்டு புன்னைகைக்கின்றான். ஒரு போராளி - இளங்கீரன். 'இயக்கப் பொடியனையே கலியாணம் கட்டப்போறாள்' ' ஜெயம் அண்ணாவின் பொடியள் இருபது முப்பது பேர் நேரடியாக வந்து நின்று வேலை செய்தார்கள்'  சிம்பிளாகவும் பம்பலாகவும் நடந்து முடிந்த திருமணம். இதையெல்லாம் பெருமையாக நினைத்த சுவேதாவின் அம்மா- இளங்கீரனின் மாமி மிகப் பெரும் தோல்விக்கு பின் அனைத்தும் மறந்து மனசுக்குள்ளும், வெளியிலும் திசை தெரியாமல் பறந்தாள். சிறுமைப்படுத்தப்படும் மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், வீடு, வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயத்தில் அலறும் மனிதர்கள் ஒரு விடுதலை போராளியின்  மீது ஏற்படுத்திய அவஸ்தை தான் தெய்வீகனின் ' அடுத்த கட்டப் போராட்டம்' சிறுகதை. '

" மனிதன் மனிதர்களைத் தேடல்- சிவப்பு நிற பலூன் சொல்ல வந்த கதை."

Image
நடப்பியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கற்பனையில் உறவாடி நேசிப்பின் நுண் உயிர் அணுக்களை ஸ்பரிசிக்கும் ஒரு குட்டிச் சிறுவனுக்கும் ஒரு சிவப்பு நிற பலூனுக்கும் கிடையிலான காட்சிகளை பேசுகின்றது இப்படம்.  அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை  நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இப்படம் கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்." குழந்தை உளவியலையும், பெரும்பான்மை விருப்புக் கொண்ட மனிதர்களிற்கும் சிறுபான்மை விருப்புக்கொண்ட மனிதர்களிற்கும் இடையிலான சிக்கலையும், மென் உணர்வும், நட்பை உயிர் கடந்து ஆராதிப்பவர்க்களை நேர் எதிர் சிந்தனை கொண்டவர்களால் துரத்தி துரத்தி இம்சிக்கப்படுவதையும், " அறிவு" என்ற சுவரை சில கண்மூடித்தனமான நம்பிக்கைகள், கேள்விக்குற்படுத்தபட முடியா கோட்பாடுகளை கொண்டு இருப்பவர்களால் இலகுவில் தாண்டி வெளிவர முடிவதில்லை என்பதையும், அழகான 60 வருடங்களிற்கு முந்தைய பாரிஸ் நகரத்தின் மு

அச்சமுற்ற போராளிகளின் மீதான #வன்முறைகள்.... தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றிய ஒரு வாசிப்பு அனுபவம்

Image
ஆயுத போராட்டம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் செலுத்தும் நியாயம் அற்ற தன்மையும்,தனி மனித அதீத கொண்டாட்டங்களும்,மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட மூளை சலவையும் சரியான புரிதலை ஏற்படுத்துவதில் பல தடைகளை செய்கின்றன. இன்றைய அரசியல் மோதல் இவ்வடிவத்தை ஏன் எடுத்து இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுவதற்கு 'வடிவங்கள் மாறுதல்' பற்றி ஆராய்வது இன்றியமையாதது ஆக்கப்பட்டுள்ளது.இனவாத அடையாளங்களை சுமக்க விடப்பட்ட சிந்தனை வயப்படாத தலைமுறையாக எமது போருக்கு பிந்திய மூன்றாம் தலைமுறை ஆக்கப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்பத்தில் ' தமிழ் ஆயுத போராட்ட  தலைமைகளின்' மீதான ஒரு மறுவாசிப்பை கோடு இட்டு காட்டி சென்றுள்ளது 'ஒரு கூர்வாளின் நிழலில்' 'இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டு போன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்..?' என்ற வரிகள் இறுதிவரை ஆதங்கமாகவே விட்டுச் செல்லப்பட்டு இருக்கின்றது. இறுதிக்கட்ட போரின் அவலங்களிற்குள் தங்களை தொலைத்துவிட்டு இருந்த அப்பாவி பொதுமக்களில் இருந்து சாதாரண போராளிகள் வரை யாவருக்கும் தெரிந்து இருந்தது

எனது பார்வையில் ''#லெனின் சின்னத்தம்பி'(நாவல்)

Image
குறுகிய வட்ட முதலாளித்துவ சிந்தனைகளால் பிரசவிக்கப்பட்ட, 'மேன்மை மனிதர்களால்' கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய தொழில் கூடங்களில் முதலாளி-தொழில் வர்க்க நிலை பிரிவு-தொழிலாளி என்ற தளங்களில் தனி மனிதனாக-கடைநிலை வர்க்க தொழிலாளியாக லெனின் சின்னத்தம்பி என்ற பாத்திரப்படைபின் அக நெருக்குதல்களை தனது நாவலின் மூலம் சித்தரித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். இன்றைய பின்-நவீனத்துவ எழுத்துக்களில் புரையோடி நிற்கின்ற போராட்டத்தின் முன்-இடை-பின் வாழ்வியலை விட்டு ஜரோப்பிய தொழில்கூடங்களில் புலம்பெயர் தமிழர்கள் சுரண்டப்படுகின்ற முரண் நிலை ஒரு தளத்தில் இருந்து கூறப்பட்டு இருக்கின்றது. பல்வேறுபட்ட இனக்குழுமங்களை சேர்ந்தவர்களின் தொழிலாளித்துவத்தில் காணப்படுகின்ற முதலாளித்துவ மனப்பாங்குகளை பெரும் அவதானிப்புகள் இன்றி இலகுவாக செய்துவிட முடியாத ஒன்றே! ஆனால் இவற்றை எல்லாம் உடைத்து எறிந்து தொடர்ச்சியாக ஒரு சிறிய 'உணவு உற்பத்திகூடத்தில்' ஒரு கடைநிலைத் தொழிலாளியின் பெரும் அவதானிப்புக்களின் தொகுப்பாக கதை? நகர்த்தபட்டுள்ளது ஒரு விதமான சலிப்பையும் ஏற்படுத்தவும் தவறவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள

சிங்களமொழியில் பிரதியாக்கம் செய்யப்பட வேண்டிய - சித்தாந்தன் சபாபதி சிறுகதை ''#புத்தரின் கண்ணீர்'' (ஜீவநதி 9 வது ஆண்டு மலர்)

# ஈழப்போரின் மௌனிப்பிற்கு பின்னரான 'மனநிலை' விகாரங்களிற்கு உள்ளான ஒரு சிங்கள இராணுவ வீரன், குடும்பத்தினது 'உணர்வு பிரளயத்திற்குள்' சென்று எழுத்தாளர் கதையாடலை நிகழ்த்தியிருக்கின்றார். போரினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதியாக இருந்து கொண்டு போரில் வெற்றிபெற்றவர்களின் உணர்வுகளை அககண் கொண்டு ஒரு பார்வை செய்திருக்கின்றார். கதை இருத்தலின் இயல்பு என்பது அறிவர்த்தத்தின் மற்றும் இருத்தலின் இயல்பைப்பற்றிய யதார்தங்களை வற்றிவிடச் செல்வது இல்லை என்ப து 'புத்தரின் கண்ணீர்' என்ற சிறுகதையினூடாக நிதர்சனம் ஆக்கப்பட்டுள்ளது. இங்கு கதையாடல் மையத்தில் வைத்து பார்க்கப்படும் 'சமரசிங்க' வும் 'சந்தன' வும் சாதாரண சிங்கள விவசாய மக்களாக இருந்த போதிலும் அவர்களிற்கேயுரிய கிராமப்புற ஆழகியல் வாசனையை வெளிக்கொண்டுவருவதில் எழுத்தாளர் சற்று பின்னடைவை சந்தித்துதான் உள்ளார். 'ஒரு குண்டு வெடிப்பு சம்பவம்' சாதாரண சிங்கள இளைஞன் மத்தியில் ஏற்படுத்திய வன்மம் 'புலிகளை' அழித்தலில் இருந்து பின்வாங்கி இறந்த பெண் உடலங்களின் பால் உறுப்புகளின் மீது வெற்றியை கொண்

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

Image
..................................................................................... கிராமிய பாட சாலைகள் மேம்பாடு என்பது எல்லாக் கிராமங்களிற்கும் அவசியமானதா? எப்படியான யதார்த்தப் போக்குடைய கிராமப்  பாடசாலைகளின் மேம்பாடுத் தன்மை உணரப்பட வேண்டும்?                 என்ற வினாக்களின் பின்னணியில் கிராமங்களை நான்கு பிரிவுக்குள் உள்வாங்கி அதற்கு விடைகாண முடியும் 1)வளர்ந்த கிராமங்கள்-இது நகரப்போக்குடையது 2)வளர்ந்து வரும் கிராமங்கள் 3)குடியேற்றக் கிராமங்கள் 4)வளர்க்கப்படவேண்டிய கிராமங்கள் மேற்குறிப்பிட்ட கிராமங்களின் வகைப்படுத்தலில் இறுதியான மூன்று வகைக் கிராமங்களிலும் முழுமையான உருமாற்றத்தைப் பெறமுடியாமல் செல்லரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளாக வறுமை, தேக்க நிலைகளைக் குறிப்பிடலாம். இக்கிராமிய மக்களின் மேம்பாட்டிற்குத் தடையாக உள்ள சமூகப் பிரச்சினைகள் 'தனிமனித-வறுமை' என்ற ஒற்றைச் சொல்லாடலில் , தேக்க நிலையை அடைந்தாலும் அது பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தேசிய ரீதியில் தூண்டுதலாக அமைந்து ஒரு சமூகச் சிக்கலாக மாறி மொத்தக் கிராமத்தினதும் எதிர்கால இளைய சந்ததியினரின் கல்வி,நடத்தை ம

தந்தி அறுந்த தம்புராவில் சுருதி மீட்ட முனையும் நாரதர்கள் ..................................................................

ஆய்வரங்குகள், பேருரைகள், கலைநிகழ்ச்சிகள், கண்காட்சிகள் என வலயங்கள் தோறும் ஆரவாரங்கள் ஒருபுறம்,ஆசிரியர் மாநாட்டிற்கு கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் என அட்டகாசம் ஒருபுறம் . தொழில்சார் வாண்மை ,  தொழில் சார் ஊக்கம், நவீன கற்பித்தற் சாதனங்களின் மூலம் கற்பித்தல், கற்பித்தல் அனுபவம் என முழக்கங்கள் ஒருபுறம். இந்த மாதிரி மாநாடுகள்  தவறானவையா? சரியானவையா? என்பதை விவாதிப்பதற்கு முன்  இது தொடர்பில் சில  விடயங்களைத் தெளிவுபடுத்துவதே எனது நோக்கம். பாடசாலைகளில் நடைபெறும் கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளுக்கு இன்றியமையாத தேவைகளாக பௌதிக மற்றும்  மனித வளங்கள்  உணரப்பட்டாலும், அவற்றின் பிரயோக முறையானது  நகரங்கள், கிராமங்கள் சார்பில் பெரிதும் வேறுபடுகின்றது. இவை சார்ந்து, மாணவர் மையத்தில் இருந்து ஆசிரியர் மாநாடுகள் நடாத்தப்பட்டனவா? ஆசிரியர்கள் சார்ந்த வாண்மை விருத்தி மற்றும்  குறைந்தபட்சமாவது பின்தங்கிய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இம்மாநாடுகள் வளர்க்கப்பட்டனவா ?  ஆசிரியர் மாநாட்டின் நோக்கம் என்பது ஏதேனும்  வரையறைகளுக்கு உட்பட்டதா? இல்லையேல் ஒதுக்கப்பட்ட பணத்தை முற்றுமுழுதாகச் செ

மதங்களின் அரசியல்

இன்று சமயங்கள் பற்றிய எமது ஈழ சமூகத்தின் பார்வை ஆதிக்கம் உள்ளதாகவும் ஒரு குழுமத்தின் இருத்தலுக்கான போராட்டமாகவும் போட்டியை மையப்படுத்திய பணம் சிந்தும் கேளிக்கை மையங்களாகவும் மாற்றம் பெற்றுவருகின்றமை பல் அவதானங்களின் ஊடாக பெற முடியும். சமயநிறுவனங்கள் இலகுவில் சாமானியர்களது அன்றாட வாழ்கையை அச்சுறுத்துவனவாகவும் உள்ளன. இன்றைய அடையாளங்கள் கடந்தகாலத்தின் மீது செலுத்தும் நியாயம் அற்ற கரிசனை வரலாற்றுப்பூர்வமான ஆதிக்கத்தை மாற்றி இருந்தாலும். இவ் வடிவங்கள் ஏன் மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றது...? இங்கு வடிவங்கள் மாறுதல் பற்றி நிறையவே சிந்திக்கவேண்டி உள்ளது. 1) நீண்டகால உள்நாட்டு யுத்தத்தால் ஏற்பட்ட மனநிலை- கேளிக்கைகளுக்கான இயல்பான ஆழ்மன உந்துதல். 2) சுகந்திரத்தை அனுபவிப்பதான பாவனை-அடக்குமுறைகளிற்கு உட்பட்டதாக உருவகித்தல் 3)பணம் சார்ந்த போட்டி-புலம்பெயர் தேசத்தில் இருந்து பெறப்படும் மிகைப்பணம் மேற்குறிப்பிட்ட வடிவங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களிற்கான சமூக பொருத்தப்பாடுடைய கேள்விகள் பலவாறு கேட்கப்படலாம். மதம் இன்றைய சமூகத்தில் இருவேறு எண்ணக்கருக்களின் மீது மையங்கொண்டு முனைப்புப் பெறுகின்றத

எம் அடுத்த தலைமுறையும் எம்மை சபிக்காது இருக்க....

கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட சமூக அரசியல், பொருளாதார மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகையில் ஏற்படுதியிருக்கும் தாக்கங்கள் தீவிரமானவை. நம் மரபின் அடையாளங்களாக அறியப்பட்டிருக்கும் குடும்பம், அறவீயல் மதிப்பீடுகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், உணவுப் பழக்கங்கள்,கலைகள் என எல்லாவற்றின் மீதும் நவீன வாழ்வின் செல்வாக்கு மேலோங்கி வருகின்றது. உலகளாவிய அளவில் மூன்றாம் உலக நாட்டு மக்கள் தமது பண்பாடு பற்றிய கற்பிதங்களை, மரபின் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் திணறிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை தமிழர் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இப்போக்கின் ஒரு பகுதி என்ற போதும் அவர்கள் சிங்கள பெரும்பான்மை அதிகாரத்தின் ஆக்கிரமிப்பு க்கும், தமிழ் அரசியல் தலைவர்களின் தப்பான முன்னெடுப்புக்களிற்கும் மேலதிகமாக போராட வேண்டியவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். நூற்றாண்டின் பாரிய வன்முறைக்கு உள்ளான ஒரு இனமாக உயிர்கள், சொத்துக்கள், அடிப்படைச்  சமூகக்கட்டுமான அமைப்புக்கள் என அனைத்தையும்  இழந்து நிற்குமாறு  ஆக்கப்பட்டிருக்கிறோம்.  ஒரு மாபெரும்  தோல்விக்குப் பின்னரான உ

பிரவுதேவாவின் படுக்கையில் விரிக்கப்பட்ட நீலநிற போர்வை எதிர்காலத்தில் நயன்தாராவுக்கு பெண் குழந்தை பிறக்க காரணமாகலாம்:"

ஒழுங்கின்மைக் கோட்பாடு (chaos theory ) என்பது கலைப் புனைவாளர்களுக்கு அறிவியல்  தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது. இந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வன்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. இக் கருத்துருவாக்கம் 20 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாக்கம் அடைந்து வந்திருக்கின்றது. 1960 களில் எட்வேட் லோரன்ஸ் (Edward Lorance) என்ற சூழலியலாளர் உருவாக்கிய காலநிலை எதிர்வு கூறல் மாதிரியே இதற்கு அடிப்படையானது. இருந்தாலும் பலர் கேட்க/எழுப்பக்கூடிய கேள்வியாகவும் இது உள்ளது.." தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம்...?" என்பது கேள்விக்குரியதே. கேயாஸ் தியரி என்றால் என்ன? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause –effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு . அதாவது உலகத்தில் இருக்கும் எந்தவொரு விஷயமும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. ஒரு விடயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"

கடினமான கணக்குகளை அறிந்து கொண்டும் அந்தக் கணக்குகளிற்குள் ஊடுருவி, கடந்து சென்ற படைப்பின் உயர்வான கவர்ச்சியாக 'அதற்குள் அவராகவே வாழ்வதால்' சாத்தியம் ஆக்கப்பட்டுள்ளது. தமயந்தியின் கதைகள் இயல்பான நேரடித் தன்மை கொண்டவை. இக் கதைகளின் பின்னனியில் இயல்பான கடல்சார் வாழ்க்கை கண்ணோட்டமும், ஈழப்போராட்ட மனிதம் சார் ஏக்கங்களும் அக்கம்பக்கமாக நிறுத்தப்படுகின்றது. கதைகள் அனுபவத்தையும், உணர்வுநிலைகளையும் மட்டுமே நம்பியிருக்கின்றன. உண்மை யின் யதார்தங்கள் ஆங்காங்கே எமது நனவிலி மனங்களை கட்டுடைத்து வெள்ளம்போல் துரைதிரள உப்பு கலந்த வாசனையோடு எம் நாசிகளை தழுவிச் சொல்கின்றன. "கள்ளும் நண்டுச் சம்பலும் வயிற்றுக்குள்  சமா வைக்கத் தொடங்கியதும் பூமியில் மானிட ஜென்மம் அடைந்ததைப்பற்றி தொடங்குவார்."  அப்பு ' கின்றார் பாடகன்'  இசைமீட்டும் நண்பரின் சிறுகதைக்குள் அப்பு தொட்டுச் சென்ற புள்ளிகள் பல ஈழத்தின் கடற்கரை வாசனையுடன் அய்ரோப்பிய மண் கொண்ட அடிப்படை மானுட விடுதலையை பேசி இருக்கிறார். " இன்பம் சுவைக்க பட்சமுடைய நண்பர்காள் ! நீங்கள் இன்பம் சுகிக்க நான் பயன்படுவேனாகில் என்னை பாவி