"பருத்தித்துறை துறைமுகமும் நல்லிணக்கத்தை செய்கின்றது...?"
இப்போது பழைய 'ஹோ' என்ற கடலின் இரைச்சல் சத்தம் இல்லை. அந்தகார வெளியை கிழித்துக் கொண்டு பயமூட்டும் காற்றசைப்பு சத்தம் மட்டும் கேட்கின்றது. இமைக்கும் அடங்க மறுக்கும் கறுப்பு சூனியத்தில் மெல்லென வருகின்றது ஆழ நீலக்கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையை ஓட்டுகின்றேன். பொட்டுப் பொட்டாய் உடைந்த சுண்ணாம்புக்கற்கள், உடைந்த கூரையற்ற சிறிய கட்டிடம். அலை களின் வீச்சில் ஈரலித்த கற்சுவர்கள் பெரும் பாகங்களாய் விழுந்துள்ளன. முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைக்கப் பட்டிருந்தது கட்டடம். தனக்கும் விடுதலை வேண்டி அச்சிறு கட்டிடம் "துறைமுகங்கள் அதிகாரசபை" என்ற சுலோகம் ஒன்றை தாங்கியிருந்து. உப்புக்காற்றில் குளிர்மையை இழந்து பழுப்பும், பச்சையுமான பனைமரத்தூண்கள் தாங்கியிருந்த மூன்று வட்டக் கொட்டில்கள். அழகாக நேர்த்தியாக இருக்கைகள் வட்டமாக சப்பு பலகைகளை கொண்டு அடிக்கப்பட்டு இருந்தது. குச்சி அடைப்பு கூரையின் கீழே நான்கு ஐந்து இளைஞர்கள் 'பொல் ரொட்டியும் கட்டைச் சம்பலும்' சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஏசி பஸ்களில் வந்து இறங்கிய பெண்களையும், ஆண்களையும் பார்த்து ஏதோ பேசித் சிரித்துக்கொண்...