Posts

Showing posts with the label சினிமா

உயிர் வாழ்வதற்கான ஓட்டப்பந்தயம் -"Shooting dogs" திரைப்படத்தை முன்வைத்து ஒரு பார்வை

Image
ஈழத் தமிழர்களிற்கு நிகழ்ந்த மனிதப் பேரவலங்களிற்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஒரு நீதியை பெற்று தர முடியுமா என்ற கேள்வி இன்றும் எம்மை குடைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அண்மையில் காணக்கிடைத்த திரைப்படம் shooting dogs இயக்கியவர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸன்(Micheal caton Jones) 2005 ம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம் 115 நிமிடங்கள் நிஜத்தில் இரத்தத்தை சுண்டும் மனித அவலத்தை காட்சிகளாக கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. Heartland திரைப்பட விழாவில்        dramatic feature ற்கான விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தலைப்பே ஒரு விசித்திரமான ஒரு குறியீட்டு வடிவத்துடனான கதையாடலை நிகழ்த்தி உள்ளது. அமைதிப்படையாக ருவாண்டாவிற்கு வந்திருந்தது ஐக்கிய நாடுகளின் இராணுவம். ஹுட்டு அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் கொல்லப்பட்ட டுட்சி இனத்தவர்களின் பிணங்களை தின்று கொண்டிருந்தன நாய்களுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கண்முன்னே கொலைவெறித் தாண்டவம் ஆடிய ஹுட்டு தீவிரவாதிகளிற்கு எதிராக ஐ.நா படையினரின் துப்பாக்கிகள் உயர்த்தப்படவில்லை. நாய்கள் என்கின்ற குறியீட்டு வடிவம் அப்பிரதேசத்தின்...

" மனிதன் மனிதர்களைத் தேடல்- சிவப்பு நிற பலூன் சொல்ல வந்த கதை."

Image
நடப்பியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கற்பனையில் உறவாடி நேசிப்பின் நுண் உயிர் அணுக்களை ஸ்பரிசிக்கும் ஒரு குட்டிச் சிறுவனுக்கும் ஒரு சிவப்பு நிற பலூனுக்கும் கிடையிலான காட்சிகளை பேசுகின்றது இப்படம்.  அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை  நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இப்படம் கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்." குழந்தை உளவியலையும், பெரும்பான்மை விருப்புக் கொண்ட மனிதர்களிற்கும் சிறுபான்மை விருப்புக்கொண்ட மனிதர்களிற்கும் இடையிலான சிக்கலையும், மென் உணர்வும், நட்பை உயிர் கடந்து ஆராதிப்பவர்க்களை நேர் எதிர் சிந்தனை கொண்டவர்களால் துரத்தி துரத்தி இம்சிக்கப்படுவதையும், " அறிவு" என்ற சுவரை சில கண்மூடித்தனமான நம்பிக்கைகள், கேள்விக்குற்படுத்தபட முடியா கோட்பாடுகளை கொண்டு இருப்பவர்களால் இலகுவில் தாண்டி வெளிவர முடிவதில்லை என்பதையும், அழகான 60 வருடங்களிற்கு முந்தைய பாரிஸ் நகரத்தின் மு...