Posts

Showing posts with the label கோட்பாடுகள்

பிரவுதேவாவின் படுக்கையில் விரிக்கப்பட்ட நீலநிற போர்வை எதிர்காலத்தில் நயன்தாராவுக்கு பெண் குழந்தை பிறக்க காரணமாகலாம்:"

ஒழுங்கின்மைக் கோட்பாடு (chaos theory ) என்பது கலைப் புனைவாளர்களுக்கு அறிவியல்  தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது. இந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வன்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. இக் கருத்துருவாக்கம் 20 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாக்கம் அடைந்து வந்திருக்கின்றது. 1960 களில் எட்வேட் லோரன்ஸ் (Edward Lorance) என்ற சூழலியலாளர் உருவாக்கிய காலநிலை எதிர்வு கூறல் மாதிரியே இதற்கு அடிப்படையானது. இருந்தாலும் பலர் கேட்க/எழுப்பக்கூடிய கேள்வியாகவும் இது உள்ளது.." தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம்...?" என்பது கேள்விக்குரியதே. கேயாஸ் தியரி என்றால் என்ன? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause –effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு . அதாவது உலகத்தில் இருக்கும் எந்தவொரு விஷயமும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. ஒரு விடயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ...