எம் அடுத்த தலைமுறையும் எம்மை சபிக்காது இருக்க....
கடந்த பத்தாண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட சமூக அரசியல், பொருளாதார மாற்றங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகையில் ஏற்படுதியிருக்கும் தாக்கங்கள் தீவிரமானவை. நம் மரபின் அடையாளங்களாக அறியப்பட்டிருக்கும் குடும்பம், அறவீயல் மதிப்பீடுகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், உணவுப் பழக்கங்கள்,கலைகள் என எல்லாவற்றின் மீதும் நவீன வாழ்வின் செல்வாக்கு மேலோங்கி வருகின்றது. உலகளாவிய அளவில் மூன்றாம் உலக நாட்டு மக்கள் தமது பண்பாடு பற்றிய கற்பிதங்களை, மரபின் அடையாளங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் திணறிக்கொண்டிருக்கின்றார்கள். இலங்கை தமிழர் வாழ்விலும் பண்பாட்டுக் கூறுகளிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இப்போக்கின் ஒரு பகுதி என்ற போதும் அவர்கள் சிங்கள பெரும்பான்மை அதிகாரத்தின் ஆக்கிரமிப்பு க்கும், தமிழ் அரசியல் தலைவர்களின் தப்பான முன்னெடுப்புக்களிற்கும் மேலதிகமாக போராட வேண்டியவர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள். நூற்றாண்டின் பாரிய வன்முறைக்கு உள்ளான ஒரு இனமாக உயிர்கள், சொத்துக்கள், அடிப்படைச் சமூகக்கட்டுமான அமைப்புக்கள் என அனைத்தையும் இழந்து நிற்குமாறு ஆக்கப்பட்டிருக்கிறோம். ஒரு மாபெரும் ...