Posts

கல்வித் தொழிற்சாலைகள்

 நாம் கல்லூரிக்குச் செல்வது எதற்காக? பட்டப்படிப்பு ஏன்? வாசிப்பு எதற்காக? கற்பது எதற்காக? இவ்வினாக்களுக்கு நாமளித்த பதில்கள் முழு மனித இனத்தையும் அழிவின் விளிம்புக்கே இழுத்துச் சென்றுவிட்டன. அவை உருவாக்கிய கரையான்கள் எமது பரம்பரையை மட்டுமல்ல¸ இனி பிறக்கவிருக்கும் சிசுக்களின் எதிர்காலங்களையும் கூட அணு அணுவாக அரிக்கத் தொடங்கி விட்டன. ஜோன் ஸ்டுவர்ட் மில் ‘யூடிலிடேரியனிஸ்ம்’ என்ற அவரது நூலில் தனி மனித நலன் சமூகப் பொது நலத்துடன் முரண்படும் போது அது சமூகத் தீமைகளுக்கு இட்டுச் செல்லும் என்றார். சுயநலம் என்பது ஒரு கொடிய நோய் என்பதையே அங்கு அவர் உணர்த்த நாடினார். ஏனெனில் சுயநலம் என்பது பரவி ஒரு சமூக நோயாக உருவெடுக்கும் போது அது சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தாக்கி¸ நிலை குலையச் செய்து முழு சமூகக் கட்டிடத்தையே வீழ்த்த வல்லது என நியாயம் கற்பித்தார். மனித உள்ளத்தில் ஒற்றுமையையும்¸ பச்சாதாபத்தையும்¸ அன்பையும் வித்திடுவதையே தீர்வாக முன்வைத்தார். மேலும் கல்வி¸ சிந்தனை¸ நிறுவனங்கள் என்ற சாதனங்கள் அந்த இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்¸ சமூக நலனை முதன்மையாகக் கருதும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற

சந்திரா ரவீந்திரன் படைப்புக்கள்

Image
இலக்கியப் படைப்புக்கள் என்னும் அழகான அறிவின் உயர்வான கவர்ச்சிகள் மனதிடத்துடன் உள்ள ஒருவருக்கே வெளிப்படுகின்றன. அதிலும் ஒரு பெண், தான் பெண்ணான பிறந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சமான கருத்துக்களையும்,  எண்ணிலடங்கா தடைகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்தும் கடினமான கணக்குகளை அறிந்து கொண்டு அந்த கடினமான கணக்குகளில் அறியப்பட்ட தடைகளையும் கடந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் சந்திரா ரவீந்திரன் அவர்கள். சந்தேகமே இல்லாமல் பெண்ணுக்கே உள்ள உன்னதமான மனோதிடமும், அசாதாரணமான திறமையும் அவரது சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், உரையாடல்களில் வெளிப்படுத்த பட்டுக்கொண்டிருக்கின்றன. தனது படைப்பு இலக்கியத்தில் வெளிப்படையான பேசு பொருளாக தாயக வாழ்க்கையின் நினைவு அனுபவங்களை,  ஈழத்தின் துயரம் நிறைந்த யுத்த அவலங்களிற்கு ஊடாக தனது சிறுகதைகளில் வெளிப்படுத்துகின்றார். மிதமிஞ்சிய புனைவுகள் அற்ற யதார்த்தமான சூழலுக்குள் வாசகனை அழைத்துச் செல்லும் எழுத்துக்கள் "காலச்சுவடு" சஞ்சிகையில் 2013 நவம்பர் வெளிவந்த "கடவுளின் உரை" என்ற சிறுகதை மூலமாக எனது வயது வந்த வாசிப்பு சூ

மனிதர்கள் சந்தோசமாக வாழ எது தேவையென்று சிந்தித்துப் பார் ."- வசந்தசீலனின் " மூன்றாம் விதி" குறும்படத்தை முன்வைத்து

Image
"மனிதன் ஒரு கற்கும் மிருகம் நாம் தூண்ட வேண்டியதில்லை" என்பார் ஜோன் ஹோல்ட். தன்னெழுச்சியான கற்கும் விருப்பம் குறித்துப் பேசுவார் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் . கற்பதற்கு ஒரு உயிரியல் பரிணாமம் உண்டு. தனது தேவைகளிற்கும் புற உலக எதார்த்தங்களிற்குமான இடைவெளியை மனிதன் தன்னெழுச்சியான கற்றலின் மூலம் நிரப்பிக் கொள்வான். மாறாக அவன் மீது விருப்புகள் திணிக்கப்படும் போது கல்வி பாரிய சுமையாக்கப்படுகின்றது. தேர்வுகள், மதிப்பீடுகள் போன்றவற்றின் மூலம் அவனை கற்றலின்பால் தள்ள வேண்டி இருப்பது இன்றைய உலக ஒத்தோடித்தனமாகவே உள்ளது. சாதாரண பாமர குடும்பம் முதல் படித்த மேட்டுக் குடியினர் வரை தமது குழந்தைகளை மதிப்பெண்களை நோக்கி விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். சமூக அந்தஸ்து என்ற போலி முகமூடியை அணிந்து மனிதம் சார்ந்த எண்ணக் கருக்களை, தன்னார்வ முயற்சிகளை குழந்தைகளின் மனதில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இன்றைய கற்றல் செயல்பாடுகளை மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் முற்றாக எதிர்க்கின்றார்கள். கற்றல் சார்ந்த ஜனநாயக உரிமை பறிக்கப்டுகின்றதை அறிந்தே ஆசிரியர்கள் சிலவற்றை குற்றமாக குழந்தைகளிடையே இனம் கண

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

Image
துவாரகனின் கவிதைப்பிரதி பல அம்சங்களையும் தன்னகத்தே கொண்டது. எளிமையான, செப்பனிடப்பட்ட , சிக்கனமான மொழி ஒரு காலகட்டத்தின் துயரப்பாடுகளை கவிமொழியாக கூறுகின்றது. இழந்து போன பொற்காலங்களை , அனுபவங்களை கூறுகின்றன. ரத்தமும் சதையுமான கதைகளை கண்ணீருடன் உதிரப்பூக்களாக வெளிப்படுத்துகின்றன. குணேஸ்வரன் அவர்களது கவிதை பிரதியை நான்கு வகையான விடய தளங்களில்,உத்தி முறைகளை என்னால் வாசிக்க முடிந்தது. 1) ஈழப்போராட்டதில் ஏற்பட்ட மனித அவலங்களும், உடல், உள சிக்கல்களையும் நேர்கோட்டு பொதுமைபடுத்தி(direct generalization ) வெளிப்படுத்தும் கவிதைகள். 2) அதிகாரம் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகின்றபோது எழுகின்ற சாதாரணனில் ஏற்படுகின்ற கோபங்களை குறியீட்டுவடிவமாக(symbolic ) வெளிப்படுத்தும் கவிதைகள். 3) அரசியல் செயல்பாடுகளின் மேற்கொண்ட அவநம்பிக்கையை ஏளனஞ்செய்து(irony ) படைக்கப்பட்ட கவிதைகள்(சர்க்கஸ் கோமாளிகளும் னங்களும், படங்காட்டுதல்) 4) சமூகத்தின் கள்ள மௌனங்களை கேள்விக்கு உட்படுத்தும் உருவகமுறை(metaphor ) கவிதை வெளிப்பாடு. இருந்தாலும் மேற்கிறிப்பிட்ட தளங்களில் இருந்து விலகல்களான இருந்த கவிதைகளும் இருக்கின

உயிர் வாழ்வதற்கான ஓட்டப்பந்தயம் -"Shooting dogs" திரைப்படத்தை முன்வைத்து ஒரு பார்வை

Image
ஈழத் தமிழர்களிற்கு நிகழ்ந்த மனிதப் பேரவலங்களிற்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஒரு நீதியை பெற்று தர முடியுமா என்ற கேள்வி இன்றும் எம்மை குடைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அண்மையில் காணக்கிடைத்த திரைப்படம் shooting dogs இயக்கியவர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸன்(Micheal caton Jones) 2005 ம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம் 115 நிமிடங்கள் நிஜத்தில் இரத்தத்தை சுண்டும் மனித அவலத்தை காட்சிகளாக கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. Heartland திரைப்பட விழாவில்        dramatic feature ற்கான விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தலைப்பே ஒரு விசித்திரமான ஒரு குறியீட்டு வடிவத்துடனான கதையாடலை நிகழ்த்தி உள்ளது. அமைதிப்படையாக ருவாண்டாவிற்கு வந்திருந்தது ஐக்கிய நாடுகளின் இராணுவம். ஹுட்டு அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் கொல்லப்பட்ட டுட்சி இனத்தவர்களின் பிணங்களை தின்று கொண்டிருந்தன நாய்களுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கண்முன்னே கொலைவெறித் தாண்டவம் ஆடிய ஹுட்டு தீவிரவாதிகளிற்கு எதிராக ஐ.நா படையினரின் துப்பாக்கிகள் உயர்த்தப்படவில்லை. நாய்கள் என்கின்ற குறியீட்டு வடிவம் அப்பிரதேசத்தின் அவலத்தினை படம்பிடி

"பருத்தித்துறை துறைமுகமும் நல்லிணக்கத்தை செய்கின்றது...?"

Image
இப்போது பழைய 'ஹோ' என்ற கடலின் இரைச்சல் சத்தம் இல்லை. அந்தகார வெளியை கிழித்துக் கொண்டு பயமூட்டும் காற்றசைப்பு சத்தம் மட்டும் கேட்கின்றது. இமைக்கும் அடங்க மறுக்கும் கறுப்பு சூனியத்தில் மெல்லென வருகின்றது ஆழ நீலக்கடல். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையை ஓட்டுகின்றேன். பொட்டுப் பொட்டாய் உடைந்த சுண்ணாம்புக்கற்கள்,  உடைந்த கூரையற்ற சிறிய கட்டிடம். அலை களின் வீச்சில் ஈரலித்த கற்சுவர்கள் பெரும் பாகங்களாய் விழுந்துள்ளன. முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைக்கப் பட்டிருந்தது கட்டடம்.  தனக்கும் விடுதலை வேண்டி அச்சிறு கட்டிடம்  "துறைமுகங்கள் அதிகாரசபை" என்ற சுலோகம் ஒன்றை தாங்கியிருந்து. உப்புக்காற்றில் குளிர்மையை  இழந்து பழுப்பும், பச்சையுமான பனைமரத்தூண்கள் தாங்கியிருந்த மூன்று வட்டக் கொட்டில்கள். அழகாக நேர்த்தியாக இருக்கைகள் வட்டமாக சப்பு பலகைகளை கொண்டு அடிக்கப்பட்டு இருந்தது. குச்சி அடைப்பு கூரையின் கீழே நான்கு ஐந்து இளைஞர்கள் 'பொல் ரொட்டியும் கட்டைச் சம்பலும்' சாப்பிட்டு கொண்டிருந்தனர். ஏசி பஸ்களில் வந்து இறங்கிய பெண்களையும், ஆண்களையும் பார்த்து ஏதோ பேசித் சிரித்துக்கொண்

பாடசாலைக் கல்வியை சமுதாயத்திற்கான கல்வியாக வென்றெடுக்க தவறுகின்றோமா....??

Image
கற்பிக்கும் மையங்களின் பரிணாம வளர்ச்சி: எல்லாவற்றையும் கற்றுக் கொள்ளும் வகையிலான பரிணாமத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன; இயற்கை விஞ்ஞானத்தில் இதற்கான ஆதாரம் உண்டு. பாடசாலையில் நுழைவதற்கு முன் தாய்மொழியை அவர்கள் கற்று விடுகின்றனர்.  அப்போது, பாடசாலை என்பது எந்த சூழலில் அமைய வேண்டும்?  குழந்தைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கற்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் அமைய வேண்டும் அல்லவா?  குழந்தைகளை மையமாகக் கொண்ட கற்கும் சூழலை, 1907ல் முதன் முதலாக ஏற்படுத்தியவர், இத்தாலியை சேர்ந்த மரியா மாண்டிசொரி.  “கற்பது என்பது, மனிதன் தன்னிச்சையாக மேற்கொள்ளும் நடவடிக்கை. வார்த்தைகளை கொண்டு மட்டும் கல்வியை அடைய முடியாது; அனுபவத்தால் அறிந்து கொள்வது தான் கல்வி’  என்று அவர் நம்பினார். இந்த மாற்றத்தை, கல்விப் புரட்சி என்று கூறக் கூடாது;  பாடசாலைக் கல்வியின் பரிணாம வளர்ச்சி என்றே கூற வேண்டும்! செயல்வழிக் கற்றல் , கற்பித்தலில் தொடங்கி கற்றல் வரை, பல முக்கிய படிகளை தாண்டி வந்துள்ளது. பாரம்பரிய வகுப்புகள், கற்பிக்கும் சூழ்நிலையில் அமைந்திருக்கும். ஒரு ஆசிரியர் அதிகாரத்துடன் பாடம் நடத்தி கொண்டிருப்பார்.