Posts

Showing posts from December, 2016

மனிதர்கள் சந்தோசமாக வாழ எது தேவையென்று சிந்தித்துப் பார் ."- வசந்தசீலனின் " மூன்றாம் விதி" குறும்படத்தை முன்வைத்து

Image
"மனிதன் ஒரு கற்கும் மிருகம் நாம் தூண்ட வேண்டியதில்லை" என்பார் ஜோன் ஹோல்ட். தன்னெழுச்சியான கற்கும் விருப்பம் குறித்துப் பேசுவார் பெர்ட்ரன்ட் ரஸ்ஸல் . கற்பதற்கு ஒரு உயிரியல் பரிணாமம் உண்டு. தனது தேவைகளிற்கும் புற உலக எதார்த்தங்களிற்குமான இடைவெளியை மனிதன் தன்னெழுச்சியான கற்றலின் மூலம் நிரப்பிக் கொள்வான். மாறாக அவன் மீது விருப்புகள் திணிக்கப்படும் போது கல்வி பாரிய சுமையாக்கப்படுகின்றது. தேர்வுகள், மதிப்பீடுகள் போன்றவற்றின் மூலம் அவனை கற்றலின்பால் தள்ள வேண்டி இருப்பது இன்றைய உலக ஒத்தோடித்தனமாகவே உள்ளது. சாதாரண பாமர குடும்பம் முதல் படித்த மேட்டுக் குடியினர் வரை தமது குழந்தைகளை மதிப்பெண்களை நோக்கி விரட்டிக் கொண்டே இருக்கின்றனர். சமூக அந்தஸ்து என்ற போலி முகமூடியை அணிந்து மனிதம் சார்ந்த எண்ணக் கருக்களை, தன்னார்வ முயற்சிகளை குழந்தைகளின் மனதில் இருந்து ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடுகின்றனர். இன்றைய கற்றல் செயல்பாடுகளை மாற்றுக் கல்வி சிந்தனையாளர்கள் முற்றாக எதிர்க்கின்றார்கள். கற்றல் சார்ந்த ஜனநாயக உரிமை பறிக்கப்டுகின்றதை அறிந்தே ஆசிரியர்கள் சிலவற்றை குற்றமாக குழந்தைகளிடையே இனம் கண