சந்திரா ரவீந்திரன் படைப்புக்கள்

இலக்கியப் படைப்புக்கள் என்னும் அழகான அறிவின் உயர்வான கவர்ச்சிகள் மனதிடத்துடன் உள்ள ஒருவருக்கே வெளிப்படுகின்றன. அதிலும் ஒரு பெண், தான் பெண்ணான பிறந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாரபட்சமான கருத்துக்களையும், எண்ணிலடங்கா தடைகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையில் இருந்தும் கடினமான கணக்குகளை அறிந்து கொண்டு அந்த கடினமான கணக்குகளில் அறியப்பட்ட தடைகளையும் கடந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றார் சந்திரா ரவீந்திரன் அவர்கள். சந்தேகமே இல்லாமல் பெண்ணுக்கே உள்ள உன்னதமான மனோதிடமும், அசாதாரணமான திறமையும் அவரது சிறுகதைகள், குறுநாவல், கவிதைகள், உரையாடல்களில் வெளிப்படுத்த பட்டுக்கொண்டிருக்கின்றன. தனது படைப்பு இலக்கியத்தில் வெளிப்படையான பேசு பொருளாக தாயக வாழ்க்கையின் நினைவு அனுபவங்களை, ஈழத்தின் துயரம் நிறைந்த யுத்த அவலங்களிற்கு ஊடாக தனது சிறுகதைகளில் வெளிப்படுத்துகின்றார். மிதமிஞ்சிய புனைவுகள் அற்ற யதார்த்தமான சூழலுக்குள் வாசகனை அழைத்துச் செல்லும் எழுத்துக்கள் "காலச்சுவடு" சஞ்சிகையில் 2013 நவம்பர் வெளிவந்த "கடவுளின் உரை" என்ற சிறுகதை மூலமாக எனது வயது வந்த வாசிப்பு சூ...