பிரவுதேவாவின் படுக்கையில் விரிக்கப்பட்ட நீலநிற போர்வை எதிர்காலத்தில் நயன்தாராவுக்கு பெண் குழந்தை பிறக்க காரணமாகலாம்:"


ஒழுங்கின்மைக் கோட்பாடு (chaos theory ) என்பது கலைப் புனைவாளர்களுக்கு அறிவியல்
 தந்த கொடை என்றே நினைக்கத்தோன்றுகிறது. இந்தக் கருத்துரு பொதுவாக தன்னிச்சை அல்லது சுய சிந்தனை, செயல் வன்மை அற்ற ஒரு அமைப்பை முன்வைத்தே முன்வைக்கப்படுகிறது. இக் கருத்துருவாக்கம் 20 ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதிகளில் உருவாக்கம் அடைந்து வந்திருக்கின்றது. 1960 களில் எட்வேட் லோரன்ஸ் (Edward Lorance) என்ற சூழலியலாளர் உருவாக்கிய காலநிலை எதிர்வு கூறல் மாதிரியே இதற்கு அடிப்படையானது. இருந்தாலும் பலர் கேட்க/எழுப்பக்கூடிய கேள்வியாகவும் இது உள்ளது.." தன்னிச்சையாக சிந்தித்து இயங்கக்கூடிய சமூக சூழலுக்கு இந்த விளைவு எவ்வளவு பொருத்தம்...?" என்பது கேள்விக்குரியதே.

கேயாஸ் தியரி என்றால் என்ன? ஒரு மிகச்சிறிய நிகழ்வு, காரணம்-விளைவு (cause –effect) சுழற்சியில் சிக்கி, காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை
உண்டாக்கும் சாத்தியக்கூறு . அதாவது உலகத்தில் இருக்கும் எந்தவொரு விஷயமும் ஒரு ஒழுங்குமுறைக்கு உட்பட்டதாகவே இருக்கின்றது. ஒரு விடயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இவ் மாற்றத்தால் ஏற்படுத்தப்படும் விளைவுகளை Butterfly effect என்பார்கள்.
இதை இப்படி விளக்குவார்கள் -

“அமேசன் பெருங்காட்டில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உண்டாகும் காற்று, காலப்போக்கில் இந்து சமுத்திரத்தில் பெரும் புயலாய்
மாறலாம்.”.

இதை வண்ணத்துப்பூச்சி விளைவு (butterfly effect) என்பர். பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) எனப்படுவது ஒரு கணித கருத்துரு. ஓர் இயங்கியல் அமைப்பில் (dynamical system) நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே (small variationss of the initial condition) அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சாரம்.

பாரதியின் கவிதையும் இதை புலப்படுத்துகின்றது.

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அங்கொரு காட்டிலோர்
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு.
.
 இலகுவாக விளக்கம் பெற சுகன் எழுதிய கவிதை ஒன்றையும் மேற்கோள் காட்டலாம்

"உன் இமை படபடக்கும் போது எல்லாம்
புயலடிக்கின்றது என் இதயத்தில்
இதற்கு பெயர் தான்
"பட்டாம்பூச்சி விளைவோ...??"

இன்னும் இலகுவாக புரிவதற்கு நாம் அன்றாடம் பெட்டிக்கடை வாசல்களில் படிக்கும் ஒரு வாசகத்தையும் நினைவு கூறலாம்...

Cigarette  to cancer / smoking causes  cancer

இதையொட்டி எடுக்கப்பட்ட இரு படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. ஒன்று ஆங்கிலப்
படம். Butterfly effect என்று பெயர்.

சிறிய வயது டயரியை வாசிக்கும் ஒருவன் தன் இளம் பிராயத்தில் நடந்த ஒவ்வொரு செயலையும் மாற்றுவதால் அவன் வாழ்க்கை இவ்வாறான மாற்றத்திற்கு உட்பட்டது என்பதே கதையின் சாராம்சம் இது சாதாரண திரைப்படங்களில் காட்டப்படுகின்ற ரைம் ராவல்(time travel ) என்பதற்கு அடிப்படையான புனைவு எனக் கொள்ளலாம். கடந்த கால நிகழ்வை மாற்றி அமைப்பதால் அந்தக் கதாபாத்திரத்தின் வாழ்க்கையையும் அந்த கதாபாத்திரத்திரத்தை சுற்றி இருப்பவர்களினதும் வாழ்க்கையில் அமையும் மாற்றங்களைக் கூறும். இக் காட்சிப் படைப்பின் பெரும் தோல்வி யாக இருப்பது பெரும்பாலும் புறம் சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை காட்டி இருக்க மாட்டார்கள் ( அண்மையில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த "24" திரைப்படத்தைக் உதாரணமாகக் கொள்ளலாம், அதே வேளை இப் படத்திற்கான கருத்து உருவாக்கமும் மேற்படி படத்தின் தாக்கத்தால் ஏற்பட்டு இருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எனக்குள் ஏற்பட்டது)

ஓர் இளைஞனின் சிறுவயதில் பல துயரமான சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. குற்ற உணர்வினால் ஒரு நண்பன் நடைபிணமாகிறான், கொடூரமான தந்தையின் வளர்ப்பினால்
ஒரு நண்பன் sadistஆக மாறிவிடுகிறான், தோழி தற்கொலை செய்துகொள்கிறாள். ஒரு நாள், அவனால் அவனது வாழ்வின் முக்கிய கணங்களுக்கு பயணம் செய்ய
முடியும் என தெரிய வருகிறது. சிறுவயதில் அந்த பயங்கரங்கள் நிகழ்ந்த
அக்கணங்களுக்கு சென்று அதை நிகழாமல் தடுத்து விட்டால், பிறகு
எல்லாவற்றையும் சரியாக்கிவிடலாம் என எண்ணுகிறான். இங்கு தான் butterfly effect வேலை செய்கிறது. அவன் செய்யும் ஒரு சிறு மாற்றம் கூட,அந்நால்வரின் வாழ்வையே முற்றிலும் மாற்றி வேறோர் பயங்கரத்திற்கு வித்திட்டு விடுகிறது. ஒவ்வொரு முறையும் இதுவே நிகழ்கிறது. கடைசியில்எப்படி இச்சுழற்சியில் இருந்து மீள்கிறான் என்பதனை காலத்தின் முன்னும் பின்னும் ஊஞ்சல் ஆடுவதை போன்றதொரு யுத்தியை கொண்டு சொல்லியிருக்கிறார்கள்

இதை போன்ற இன்னொரு படம் “ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு” (The Beating of a Butterfly’s Wings). இது ஒரு ப்ரென்ச்(French ) மொழி படம். ஆங்கில
மொழியில் happen stance என்ற பெயரில் வந்து இருக்கின்றது.

பல்பொருள் அங்காடி பணிப்பெண், சகாரா பாலைவனத்தின் மணல், மனைவிக்கும், கள்ளக்காதலிக்கும் இடையே சிக்கித்தவிக்கும் ஒருவன். பொய்சொல்வதில் வல்லவன் ஒருவன், அல்ஜீரிய எழுத்தாளன், பாரிஸ் நகரத்து வண்டு,முதிர்கன்னி, ஓர் கூழாங்கல், முதலுதவி நிபுணன், சாக்லேட்.,சம்பந்தமே இல்லாத இவர்களின்/இவற்றின் ஒரு நாள் நிகழ்வை பற்றிய படம் இது.ஒருவரின் ஓர் சிறு செய்கை மற்றவரின் வாழ்வினை முற்றிலுமாக மாற்றிவிடுகிறது. கொஞ்சம் அசந்தாலும் குழப்பிவிட்டு ஓடிவிடக்கூடிய கருத்தாக்கம் இது. தேர்ந்த திரைக்கதையினை கொண்டு இதனை நன்றாகவே வடித்துள்ளார் இயக்குனர்.

Butterfly effect, காலத்தின் மீதான ஒழுங்கின்மை  தத்துவ விளைவுகளை பற்றி
பேசுகிறது. Happen stance சம்மந்தமில்லாத 12 மனிதர்களின் நிகழ்வுகளின் விளைவைப் பற்றி பேசுகிறது. இருப்பினும் அடிப்படையில் இக்கோட்பாட்டின் அடிநாதங்களாக விளங்கிக் கொள்ளப்படலாம்.

இவ் விடத்தில் காலத்தின் மீதான ஒழுங்கின்மையை பற்றிய உரையாடலுக்குள் கமலஹாசனின் நடிப்பில் வெளியான தசாவதாரம்( இப் திரைப்பட மே ஒழுங்கின்மை கோட்பாடு பற்றி என்னை தேடல் கொள்ள வைத்தது ) திரைப்படத்தினையும் தொடர்புபடுத்தி சுருங்க கூறின் மேல் நுண்- உணர்வினைக் கொண்டுள்ள தன்மை எனலாம். முதலில் காட்டப்படும் 12ம் நூற்றாண்டின் ரங்கராஜன் நம்பி கடலில் வீசப்படும் கதைக்கும்  21 ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்கும் இடையிலான தொடர்பு இது தான். ஒழுங்கின்மைக் கோட்பாடு பெரிய சிலை கடலில் ஏற்படுத்தும் சிறு பாதிப்பு பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் பல தொடர் விளைவுகளுக்கு காரணமாகிறது. சிலை எறியப்படாது போய் இருந்தால் சுனாமி இல்லை . சுனாமி இல்லை என்றால் புதிய ரசாயன ஆயுதத்தால் மனித குலம் அழிக்கப்பட்டிருக்கும். இதுவே தசாவதாரத்தில் காட்டப்படும் Butterfly effect

இதனை இவ்வாறும் நாம் பொருள் கொள்ளலாம் 'பார்ப்பவன் என்றவன் இல்லை இங்கு பங்குகொள்பவன் என்பது தான் நிகழ்கின்றது.(here no one is a audience every one is a participant ) ஸ்பைடர் வெப்(spider web) என்ற சித்தாந்தத்தின் படி இப்பிரபஞ்சமே ஒரு சிலந்தி வலைக் கட்டமைப்பு. ஒரு இடத்தில் உருவாகும் மாற்றம் வலையின் அதிர்வுகளின் ஊடாக பரவி இன்னொரு விடயத்தை பாதிக்கலாம் என்று கூறப்படுகின்றது.(the world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point the vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingles)

கருத்தியல் (Ideology) அல்லது கருத்தியல்வாதம் என்பது,நம்பிக்கைகள், இலக்குகள், எண்ணக்கருக்கள் ஆகியவற்றின் ஒரு தொகுதி. பொதுவாக அரசியலில் இது பயன்படுத்தபடுகிறது. கருத்தியல்என்னும் சொல்லுக்குப் பதிலாக கருத்துநிலை, சித்தாந்தம் போன்ற சொற்களும் வழக்கில் உள்ளன. சமூக ஊடாட்டம் வளர வளர மனிதர்கள் பொதுவான எண்ணக் கருத்துக்களையும், உலகம் பற்றியனவும், தமது சமூக வாழ்க்கை பற்றியனவும், தெய்வம், சொத்து, தர்மம், நீதி ஆகியவை பற்றியவையுமான நோக்குகளை வளர்த்துக் கொள்கிறார்கள். இவ்வாறாக இவை சமூகம், அரசியல், சட்டம், மதம், கலைத்துவம், மெய்யியல் நோக்கு ஆகியவை தொடர்பான கருத்துநிலைப்பட்ட எண்ணங்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இவையேகருத்துநிலை என்று பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றது." என ஜேம்ஸ் கிளக்மான் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி எழுதியுள்ளார்.

கருத்தியலின் முக்கியமான நோக்கம் நெறி சார்ந்த சிந்தனைகள்ஊடாக மாற்றங்களை உண்டாக்குவதாகும். கருத்தியல்கள் பொது விடயங்களில் பயன்படுத்தப்படும் பண்பியற் சிந்தனை (abstract thought) முறைமைகள் எனலாம். இதனால் கருத்தியல் என்னும்கருத்துரு அரசியலில் சிறப்பிடம் பெறுகிறது. வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் சொல்லப்படாவிட்டாலும் எல்லா அரசியல் போக்குகளும் உள்ளார்ந்த நிலையில் ஒரு கருத்தியல் நிலையைக் கொண்டிருக்கின்றன.

மொத்தத்தில் ஒழுங்கின்மைக்கோட்பாட்டை மறைத்து அண்டம் என்கின்ற ஒழுங்கற்ற தன்மைக்கு இறைவன் என்ற பெயர் கொடுக்கும் ஆன்மீகத்திற்கும் இக் கோட்பாட்டை விளக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையேயான போராட்டமாகவே தேடலின் முடிவு எனதளவில் நிகழ்ந்து விட்டிருந்தது.
"Life finds a way"

எச்சரிக்கை:
எனது போதாமை, சரிவர ஒழுங்கின்மை கோட்பாட்டை உள்வாங்காத வாசிப்பு, ஆங்கில குறைபாடு ஆகியவை இதில் எதிரொலிக்கலாம். இக் கோட்பாட்டை முழுமையாக உள்வாங்கி வாசித்தவர்கள் இதிலுள்ள பிழைகளை சுட்டிக் காட்டினால், திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும். தனிப்பட்ட ரீதியில் எடுத்த குறிப்புகளை கட்டுரையாக பொதுவில் முன்வைக்கவும் அதுவே காரணம்.

தொடர் வாசிப்பில் இங்குள்ள பல விஷயங்கள் நாளை வேறுவகையான புரிதலுக்கும் இட்டுச் செல்லலாம் என்பதை ஒப்புக் கொள்வதில் தயக்கமேதுமில்லை.

#தர்ஷன் அருளானந்தன் #

உசாத்துணைகள்
Www.abarim-publication.com
Www.imdb.com
Kurnthamizl.blogspot. com
Sureshmath.blogspot,.com
Maayanpaarvai.blog spot.com

Comments

Popular posts from this blog

"அம்மாவிடம் சேகரமாகிய முத்தங்கள்-சோரம் போய்விடவில்லை"

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

கடலோடியின் நினைவுக் குறிப்புகளினுடான காற்றில் உப்புக் கரிக்கவில்லை. - தமயந்தியின் ' ஏழு கடல்கன்னிகள்"