கல்வித் தொழிற்சாலைகள்
நாம் கல்லூரிக்குச் செல்வது எதற்காக? பட்டப்படிப்பு ஏன்? வாசிப்பு எதற்காக? கற்பது எதற்காக? இவ்வினாக்களுக்கு நாமளித்த பதில்கள் முழு மனித இனத்தையும் அழிவின் விளிம்புக்கே இழுத்துச் சென்றுவிட்டன. அவை உருவாக்கிய கரையான்கள் எமது பரம்பரையை மட்டுமல்ல¸ இனி பிறக்கவிருக்கும் சிசுக்களின் எதிர்காலங்களையும் கூட அணு அணுவாக அரிக்கத் தொடங்கி விட்டன. ஜோன் ஸ்டுவர்ட் மில் ‘யூடிலிடேரியனிஸ்ம்’ என்ற அவரது நூலில் தனி மனித நலன் சமூகப் பொது நலத்துடன் முரண்படும் போது அது சமூகத் தீமைகளுக்கு இட்டுச் செல்லும் என்றார். சுயநலம் என்பது ஒரு கொடிய நோய் என்பதையே அங்கு அவர் உணர்த்த நாடினார். ஏனெனில் சுயநலம் என்பது பரவி ஒரு சமூக நோயாக உருவெடுக்கும் போது அது சமூகக் கட்டமைப்பின் அத்திவாரத்தையே தாக்கி¸ நிலை குலையச் செய்து முழு சமூகக் கட்டிடத்தையே வீழ்த்த வல்லது என நியாயம் கற்பித்தார். மனித உள்ளத்தில் ஒற்றுமையையும்¸ பச்சாதாபத்தையும்¸ அன்பையும் வித்திடுவதையே தீர்வாக முன்வைத்தார். மேலும் கல்வி¸ சிந்தனை¸ நிறுவனங்கள் என்ற சாதனங்கள் அந்த இலக்கை நோக்கி நகர்த்தப்பட வேண்டும்¸ சமூக நலனை முதன்மையாகக் கருதும் சிறந்த மனிதர்களை உருவாக்குவதற