Posts

"சித்தப்பா பூங்கா"

Image
சமீப நாட்களில் எல்லாம் பஸ் ஏறுவதற்காக ஓராம் கட்டை சந்திக்கு வந்தால் அவனுக்குள் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் அந்தக் கனவு தன் உள்ளத்தில் எங்கேயோ ஒரு புல்லாங்குழல் இனிமையானதோ, துன்பகரமானதோ எனப் புரியாத ஒரு இராகத்தை மீட்டிக் கொண்டிருக்கின்றது. அவ்வளவு எல்லையற்றதாக இருந்தது அவனது மகிழ்ச்சியும், வேதனையும். கண்களைத் செருகி கனவில் வந்த சித்திரங்களை ஆராய்ந்தான். விசித்திரமான சீருடையுடன் அழகான மனிதர்களின் அரைப்பட போட்டோக்கள் மதில்கள் முழுவதும் தெரிந்தன.'வீரவணக்கம்' என்னும் தலையங்கத்தின் கீழே.  விசித்திரமான மந்திரப் பாட்டுப் பொட்டியில் இருந்து துள்ளலும் , இனிமையுமான சங்கீதம் பரவிக் கொண்டிருந்தது. கிளைகளும் மரங்களும், இலைகளும் பூக்களும், விந்தையான உருவமுடைய பறவைகளும், மிருகங்களும், மனிதர்களும் அங்கே இருந்தார்கள். "உனக்கு தெரியுமா? சிறப்பான அவன் அறிந்த காட்டைப் பற்றியது இக் கனவு." மனதில் கவலை இருந்தால் உற்சாகம் ஏற்படுவதற்கும், தியாகங்களை மனதில் சுமப்பதற்கும் இக் காட்டைப் பற்றி நினைத்தால் போதும். சில நேரங்களில் நல்ல கனவுகளை நாம் காண்போம். ஆனால் விழிக்கும் போது அது என்னவென...

போருக்கு பிந்திய சமூகத்தில்- "அடுத்த கட்டப் போராட்டம்" - மனித மனங்களிலேயே.

சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் போராளிக் குடும்பமாக வாழ்ந்த வீட்டை துறந்து முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் போது மன இறுக்கத்தை தூண்டும் மௌனங்களாலும், கலவரமூட்டும் சப்தங்களாலும் , புனிதத்தின் பெயரால் வரலாற்றின் நியாயங்களை வன்முறைக்கு உட்படுத்தும் ஒரு சமூகத்தைக் கண்டு புன்னைகைக்கின்றான். ஒரு போராளி - இளங்கீரன். 'இயக்கப் பொடியனையே கலியாணம் கட்டப்போறாள்' ' ஜெயம் அண்ணாவின் பொடியள் இருபது முப்பது பேர் நேரடியாக வந்து நின்று வேலை செய்தார்கள்'  சிம்பிளாகவும் பம்பலாகவும் நடந்து முடிந்த திருமணம். இதையெல்லாம் பெருமையாக நினைத்த சுவேதாவின் அம்மா- இளங்கீரனின் மாமி மிகப் பெரும் தோல்விக்கு பின் அனைத்தும் மறந்து மனசுக்குள்ளும், வெளியிலும் திசை தெரியாமல் பறந்தாள். சிறுமைப்படுத்தப்படும் மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், வீடு, வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது. அந்தப் பயத்தில் அலறும் மனிதர்கள் ஒரு விடுதலை போராளியின்  மீது ஏற்படுத்திய அவஸ்தை தான் தெய்வீகனின் ' அடுத்த கட்டப் போராட்டம்' சிறுகதை. ' ...

" மனிதன் மனிதர்களைத் தேடல்- சிவப்பு நிற பலூன் சொல்ல வந்த கதை."

Image
நடப்பியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கற்பனையில் உறவாடி நேசிப்பின் நுண் உயிர் அணுக்களை ஸ்பரிசிக்கும் ஒரு குட்டிச் சிறுவனுக்கும் ஒரு சிவப்பு நிற பலூனுக்கும் கிடையிலான காட்சிகளை பேசுகின்றது இப்படம்.  அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும் போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை  நிச்சயம் பெறுவோம் என்று  உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இப்படம் கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்." குழந்தை உளவியலையும், பெரும்பான்மை விருப்புக் கொண்ட மனிதர்களிற்கும் சிறுபான்மை விருப்புக்கொண்ட மனிதர்களிற்கும் இடையிலான சிக்கலையும், மென் உணர்வும், நட்பை உயிர் கடந்து ஆராதிப்பவர்க்களை நேர் எதிர் சிந்தனை கொண்டவர்களால் துரத்தி துரத்தி இம்சிக்கப்படுவதையும், " அறிவு" என்ற சுவரை சில கண்மூடித்தனமான நம்பிக்கைகள், கேள்விக்குற்படுத்தபட முடியா கோட்பாடுகளை கொண்டு இருப்பவர்களால் இலகுவில் தாண்டி வெளிவர முடிவதில்லை என்பதையும், அழகான 60 வருடங்களிற்கு முந்தைய பாரிஸ் நகரத்தின் மு...

அச்சமுற்ற போராளிகளின் மீதான #வன்முறைகள்.... தமிழினி ஜெயக்குமாரன் எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றிய ஒரு வாசிப்பு அனுபவம்

Image
ஆயுத போராட்டம் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் செலுத்தும் நியாயம் அற்ற தன்மையும்,தனி மனித அதீத கொண்டாட்டங்களும்,மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட மூளை சலவையும் சரியான புரிதலை ஏற்படுத்துவதில் பல தடைகளை செய்கின்றன. இன்றைய அரசியல் மோதல் இவ்வடிவத்தை ஏன் எடுத்து இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளுவதற்கு 'வடிவங்கள் மாறுதல்' பற்றி ஆராய்வது இன்றியமையாதது ஆக்கப்பட்டுள்ளது.இனவாத அடையாளங்களை சுமக்க விடப்பட்ட சிந்தனை வயப்படாத தலைமுறையாக எமது போருக்கு பிந்திய மூன்றாம் தலைமுறை ஆக்கப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்பத்தில் ' தமிழ் ஆயுத போராட்ட  தலைமைகளின்' மீதான ஒரு மறுவாசிப்பை கோடு இட்டு காட்டி சென்றுள்ளது 'ஒரு கூர்வாளின் நிழலில்' 'இனத்தின் விடுதலைக்காக என்ற நியாயத்திற்குள் புதையுண்டு போன உண்மைகளுக்கு எந்த ஆராய்ச்சி மணியை அடித்து யாரிடம் நீதி கேட்க முடியும்..?' என்ற வரிகள் இறுதிவரை ஆதங்கமாகவே விட்டுச் செல்லப்பட்டு இருக்கின்றது. இறுதிக்கட்ட போரின் அவலங்களிற்குள் தங்களை தொலைத்துவிட்டு இருந்த அப்பாவி பொதுமக்களில் இருந்து சாதாரண போராளிகள் வரை யாவருக்கும் தெரிந்து இருந்தது...

எனது பார்வையில் ''#லெனின் சின்னத்தம்பி'(நாவல்)

Image
குறுகிய வட்ட முதலாளித்துவ சிந்தனைகளால் பிரசவிக்கப்பட்ட, 'மேன்மை மனிதர்களால்' கட்டமைக்கப்பட்ட மேற்கத்திய தொழில் கூடங்களில் முதலாளி-தொழில் வர்க்க நிலை பிரிவு-தொழிலாளி என்ற தளங்களில் தனி மனிதனாக-கடைநிலை வர்க்க தொழிலாளியாக லெனின் சின்னத்தம்பி என்ற பாத்திரப்படைபின் அக நெருக்குதல்களை தனது நாவலின் மூலம் சித்தரித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர். இன்றைய பின்-நவீனத்துவ எழுத்துக்களில் புரையோடி நிற்கின்ற போராட்டத்தின் முன்-இடை-பின் வாழ்வியலை விட்டு ஜரோப்பிய தொழில்கூடங்களில் புலம்பெயர் தமிழர்கள் சுரண்டப்படுகின்ற முரண் நிலை ஒரு தளத்தில் இருந்து கூறப்பட்டு இருக்கின்றது. பல்வேறுபட்ட இனக்குழுமங்களை சேர்ந்தவர்களின் தொழிலாளித்துவத்தில் காணப்படுகின்ற முதலாளித்துவ மனப்பாங்குகளை பெரும் அவதானிப்புகள் இன்றி இலகுவாக செய்துவிட முடியாத ஒன்றே! ஆனால் இவற்றை எல்லாம் உடைத்து எறிந்து தொடர்ச்சியாக ஒரு சிறிய 'உணவு உற்பத்திகூடத்தில்' ஒரு கடைநிலைத் தொழிலாளியின் பெரும் அவதானிப்புக்களின் தொகுப்பாக கதை? நகர்த்தபட்டுள்ளது ஒரு விதமான சலிப்பையும் ஏற்படுத்தவும் தவறவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் எம்மவர்கள...

சிங்களமொழியில் பிரதியாக்கம் செய்யப்பட வேண்டிய - சித்தாந்தன் சபாபதி சிறுகதை ''#புத்தரின் கண்ணீர்'' (ஜீவநதி 9 வது ஆண்டு மலர்)

# ஈழப்போரின் மௌனிப்பிற்கு பின்னரான 'மனநிலை' விகாரங்களிற்கு உள்ளான ஒரு சிங்கள இராணுவ வீரன், குடும்பத்தினது 'உணர்வு பிரளயத்திற்குள்' சென்று எழுத்தாளர் கதையாடலை நிகழ்த்தியிருக்கின்றார். போரினால் தோற்கடிக்கப்பட்ட ஒரு தரப்பின் பிரதிநிதியாக இருந்து கொண்டு போரில் வெற்றிபெற்றவர்களின் உணர்வுகளை அககண் கொண்டு ஒரு பார்வை செய்திருக்கின்றார். கதை இருத்தலின் இயல்பு என்பது அறிவர்த்தத்தின் மற்றும் இருத்தலின் இயல்பைப்பற்றிய யதார்தங்களை வற்றிவிடச் செல்வது இல்லை என்ப து 'புத்தரின் கண்ணீர்' என்ற சிறுகதையினூடாக நிதர்சனம் ஆக்கப்பட்டுள்ளது. இங்கு கதையாடல் மையத்தில் வைத்து பார்க்கப்படும் 'சமரசிங்க' வும் 'சந்தன' வும் சாதாரண சிங்கள விவசாய மக்களாக இருந்த போதிலும் அவர்களிற்கேயுரிய கிராமப்புற ஆழகியல் வாசனையை வெளிக்கொண்டுவருவதில் எழுத்தாளர் சற்று பின்னடைவை சந்தித்துதான் உள்ளார். 'ஒரு குண்டு வெடிப்பு சம்பவம்' சாதாரண சிங்கள இளைஞன் மத்தியில் ஏற்படுத்திய வன்மம் 'புலிகளை' அழித்தலில் இருந்து பின்வாங்கி இறந்த பெண் உடலங்களின் பால் உறுப்புகளின் மீது வெற்றியை கொண்...

கேள்விக்கு உட்படுத்தப்படும் வடமாகாண கிராமப்புற மாணவர்களின் கல்வி

Image
..................................................................................... கிராமிய பாட சாலைகள் மேம்பாடு என்பது எல்லாக் கிராமங்களிற்கும் அவசியமானதா? எப்படியான யதார்த்தப் போக்குடைய கிராமப்  பாடசாலைகளின் மேம்பாடுத் தன்மை உணரப்பட வேண்டும்?                 என்ற வினாக்களின் பின்னணியில் கிராமங்களை நான்கு பிரிவுக்குள் உள்வாங்கி அதற்கு விடைகாண முடியும் 1)வளர்ந்த கிராமங்கள்-இது நகரப்போக்குடையது 2)வளர்ந்து வரும் கிராமங்கள் 3)குடியேற்றக் கிராமங்கள் 4)வளர்க்கப்படவேண்டிய கிராமங்கள் மேற்குறிப்பிட்ட கிராமங்களின் வகைப்படுத்தலில் இறுதியான மூன்று வகைக் கிராமங்களிலும் முழுமையான உருமாற்றத்தைப் பெறமுடியாமல் செல்லரித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளாக வறுமை, தேக்க நிலைகளைக் குறிப்பிடலாம். இக்கிராமிய மக்களின் மேம்பாட்டிற்குத் தடையாக உள்ள சமூகப் பிரச்சினைகள் 'தனிமனித-வறுமை' என்ற ஒற்றைச் சொல்லாடலில் , தேக்க நிலையை அடைந்தாலும் அது பல சமூகப் பிரச்சினைகளுக்குத் தேசிய ரீதியில் தூண்டுதலாக அமைந்து ஒரு சமூகச் சிக்கலாக மாறி மொத்தக் கிராமத்தினதும் எதிர்க...