உயிர் வாழ்வதற்கான ஓட்டப்பந்தயம் -"Shooting dogs" திரைப்படத்தை முன்வைத்து ஒரு பார்வை

ஈழத் தமிழர்களிற்கு நிகழ்ந்த மனிதப் பேரவலங்களிற்கு ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ ஒரு நீதியை பெற்று தர முடியுமா என்ற கேள்வி இன்றும் எம்மை குடைந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அண்மையில் காணக்கிடைத்த திரைப்படம் shooting dogs இயக்கியவர் மைக்கேல் கற்றன் ஜோன்ஸன்(Micheal caton Jones) 2005 ம் ஆண்டில் திரையிடப்பட்ட இப்படம் 115 நிமிடங்கள் நிஜத்தில் இரத்தத்தை சுண்டும் மனித அவலத்தை காட்சிகளாக கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. Heartland திரைப்பட விழாவில் dramatic feature ற்கான விருதையும் பெற்றுள்ளது. திரைப்படத்தின் தலைப்பே ஒரு விசித்திரமான ஒரு குறியீட்டு வடிவத்துடனான கதையாடலை நிகழ்த்தி உள்ளது. அமைதிப்படையாக ருவாண்டாவிற்கு வந்திருந்தது ஐக்கிய நாடுகளின் இராணுவம். ஹுட்டு அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் கொல்லப்பட்ட டுட்சி இனத்தவர்களின் பிணங்களை தின்று கொண்டிருந்தன நாய்களுடன் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர். கண்முன்னே கொலைவெறித் தாண்டவம் ஆடிய ஹுட்டு தீவிரவாதிகளிற்கு எதிராக ஐ.நா படையினரின் துப்பாக்கிகள் உயர்த்தப்படவில்லை. நாய்கள் என்கின்ற குறியீட்டு வடிவம் அப்பிரதேசத்தின்...